மத்திய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில்
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு பொருளாதார திட்டத்தில் என்னென்ன சலுகைகள் வெளியிடப்பட்டு உள்ளன? என்ற விவரங்களை பட்டியலிட்டார் .
8.19 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 16 ஆயிரத்து 349 கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளதாகவும், ஜன் தன் கணக்கு மூலம் 20 கோடி பெண்களுக்கு 10 ஆயிரத்து 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் முதியோருக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
Comments