கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் சிறை கைதிகள் 7,200க்கும் மேற்பட்டோர் விடுதலை
மகாராஷ்டிராவில் சிறைசாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 7 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட கைதிகளை இடைக்கால ஜாமீனில் அந்த மாநில அரசு விடுதலை செய்துள்ளது.
மும்பை ஆர்தர்ரோடு சிறையில் 184 கைதிகளுக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சிறைகளில் நோய் பரவாமல் இருக்க பரிந்துரைகளை அளிக்க குழு ஒன்றை மாநில அரசு அமைத்தது.
அக்குழுவால் ஊபா உள்ளிட்ட கடுமையான சட்டம் அல்லாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டு கைதிகளாக இருப்போரில் 50 சதவீதம் பேரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க பரிந்துரை அளிக்கப்பட்டது.
இதையேற்று மாநில அரசால் இதுவரை 7 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோரை மாநில அரசு விடுதலை செய்துள்ளது. இதேபோல் மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விரைவில் விடுதலை செய்யப்படுவர் எனவும் மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
Comments