மீன்பிடி தடைக்காலம் என்பதால் உயர்ந்து காணப்பட்ட மீன்களின் விலை
மீன்பிடி தடைக்காலம் என்பதால் சென்னையில் மீன்களின் விலையும் இறைச்சி விலையும் உயர்ந்து காணப்பட்டது.
பட்டினப்பாக்கத்தில் 56 நாட்களுக்குப் பிறகு மீன் சந்தை திறக்கப்பட்டதாலும் விடுமுறை நாள் என்பதாலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி, ஒலிபெருக்கி மூலமாக போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
மீன்பிடி தடைக்காலம் என்பதால் அனைத்து வகையான மீன்களும் விலையுயர்ந்து காணப்பட்டன. கடந்த வாரம் கிலோ 250 ரூபாய்க்கு விற்ற சங்கரா மீன் விலை 400 ரூபாய்க்கும் 250 ரூபாய்க்கு விற்ற இறால் மீன் 300 ரூபாய்க்கும் விற்பனையானது.
சீலா, கவளை, நண்டு உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. இதேபோல் எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் இறைச்சி விலையும் கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ 650 ரூபாய்க்கு விற்ற மட்டன், இந்த வாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
Comments