சென்னையில் கொரோனா பாதிப்பு 6,271 ஆக அதிகரிப்பு

0 1664
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,271 ஆக அதிகரித்துள்ள நிலையில், ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 1,112 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,271 ஆக அதிகரித்துள்ள நிலையில், ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 1,112 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் சென்னையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் மட்டுமே 1,112 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 973 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் 750 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 669 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அதே போல் தண்டையார்ப்பேட்டை, அண்ணா நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதே போல் பாதிக்கப்பட்ட 6,271 பேரில் 1,213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 51 பேர் உயிரிழந்துள்ளனர். 60.84 சதவீதம் ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் 39.13 சதவீதத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments