அம்பான் புயல் காரணமாக 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
அம்பான் புயல் காரணமாக தூத்துக்குடி, பாம்பன், கடலூர், நாகை துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள அம்பான் புயல் காரணமாக சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுச்சேரி மற்றும் காரைக்காலின் வாஞ்சூர் துறைமுகங்களிலும் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments