பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 23 பேர் மீட்பு

0 2874

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தின் நடுவில் சிக்கி தவித்த 23பேர், 2மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக நெல்லித்துறை படித்துறை அருகே பவானி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளிக்கச் சென்றனர்.

அப்போது நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பீதி அடைந்த அவர்கள் நடுவே கரையோர பகுதிகளில் இருந்த காய்ந்த மரக்கிளைகளில் ஏறியும் செடி, கொடிகளை பிடித்துக்கொண்டும் காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பரிசல் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments