புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் -அமைச்சர் நிதின் கட்கரி
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், நாட்டின் பொருளாதாரத்தைப் படிப்படியாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக தெரிவித்தார் . இந்நிலையில் தொழிலாளர் பிரச்சினை குறித்து மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் கட்கரி கூறினார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உள்மனத்தில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்றும் கட்கரி வலியுறுத்தினார்.
Comments