புலம் பெயர் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் வாகன ஏற்பாடு
உத்தரப்பிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உத்தரப்பிரதேசத்தில் சிக்கி தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 1000 சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காசியாபாத்தின் காசிப்பூர் எல்லையிலிருந்தும், நொய்டா எல்லையிலிருந்தும் தலா 500 பேருந்துகளை இயக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கான முழு செலவையும் காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments