புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேசன் பொருட்கள் வழங்க மத்திய அரசு உத்தரவு
8 கோடி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்களை 15 நாட்களுக்குள் வழங்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கால் வேலையிழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். கையில் பணம் இல்லாமல் உண்ண உணவில்லாமல் தவிக்கும் தொழிலாளர்கள், ஏழை மக்களின் துயர் துடைக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக உணவின்றி வாடும் எட்டுகோடி பேருக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் உடனடியாக உணவுப் பொருட்கள் வழங்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .இது குறித்து செய்தியாளர்களிடம் காணொலி மூலம் பேசிய மத்திய உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், எட்டுகோடிக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தால் அவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
Comments