உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 47 லட்சத்தை கடந்தது
உலகம் முழுவதும் 18 லட்சத்து 11 ஆயிரம் பேர், குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 500 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் அங்கு 1,200 பேர் பலியாகி உள்ளனர்.
ஸ்பெயினில், ஒரே நாளில் 2 ஆயிரத்து 138 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ரஷியாவில் 9 ஆயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டனர்.
இங்கிலாந்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 450 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
பிரேசிலில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, மற்றொரு பக்கம் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 757 பேரும், சவுதி அரேபியாவில் 2 ஆயிரத்து 840 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனாவின் ஊற்றுக்கண்ணான சீனாவில்,கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் மட்டுமே வைரஸ் தொற்று உறுதி ஆனது.
நேபாளத்தில் முதன் முறையாக ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மெக்சிகோ, பாகிஸ்தான் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனிடையே, உலகம் முழுவதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 45 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
----
Comments