நடந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல்காந்தி

0 4013
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசியதுடன் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு வாகனங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசியதுடன் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு வாகனங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இதேபோல் அரியானாவில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சிக்குச் செல்வதற்காக டெல்லி வழியாக நடந்து வந்தனர்.

அப்போது அவர்களை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு உணவு, குடிநீர், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

அதன்பின்னர் காங்கிரஸ் சார்பில் வாகனங்களை ஏற்பாடு செய்து தொழிலாளர்களை ஏற்றி அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments