"டூர் ஆப் டுயூட்டி" திட்டத்தில் பணிபுரிந்தோருக்கு வாய்ப்பளிக்க ஆனந்த் மகிந்த்ரா ஆர்வம்

0 3086
ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் பணியாற்ற வகை செய்யும் "டூர் ஆப் டுயூட்டி" திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, தனது நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பளிப்பதாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா அறிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய ராணுவத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘டூர் ஆப் டுயூட்டி’ திட்டம் மூலம் ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு கிடைக்கப் பெற்ற அனுபவங்கள், பணியிடங்களில் கூடுதல் திறனாக இருக்கும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ராணுவத்தில் பணியாற்றுவதற்கான தேர்வு முறை மற்றும் தேர்வான பின் அளிக்கப்பட்ட பயிற்சி ஆகியவற்றின் தரத்தை கருத்தில் கொண்டால், அத்தகைய பயிற்சி பெற்ற ஒருவரை பணியில் சேர்ப்பதை எண்ணி மகிந்த்ரா குழுமம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்  கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments