வடதமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
வட தமிழகத்தில் இன்று முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி உள்ளிட்ட இடங்களில் 5 சென்டி மீட்டர் மழையும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை வாடிப்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
Comments