மகாராஷ்டிராவில் 1,140 போலீசாருக்கு கொரோனா நோய் பாதிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா நோய் பாதித்த போலீசாரின் எண்ணிக்கை ஆயிரத்து 140ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனா நோய் பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 120 அதிகாரிகள், ஆயிரத்து 20 போலீசார் என மொத்தம் ஆயிரத்து 140 போலீசாருக்கு (1,140) கொரோனா உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயிலிருந்து 268 போலீசார் இதுவரை சிகிச்சையில் குணமடைந்துள்ள நிலையில், 10 போலீசார் உயிரிழந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் போலீசார் மீது 231 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக 812 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments