மத்திய அரசின் ஊக்குவிப்புத் திட்டத்தில் 13 பூஜ்யங்கள் மட்டுமே உள்ளன - காங்கிரஸ்
மத்திய அரசு அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் 13 பூஜ்யங்கள் மட்டுமே உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டுவதற்காக மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா, ஊக்குவிப்புத் திட்டத்தில் உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு சல்லிக்காசு கூடக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
20 லட்சம் கோடி ரூபாய்த் திட்டம் வெற்று அறிவிப்பாகும் என்றும், இதில் 13 பூஜ்யங்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார். 20 லட்சம் கோடிக்கு 13 பூஜ்யங்கள் உள்ளது குறிப்பிடத் தக்கது.
வேளாண் கடன் திருப்பிச் செலுத்தும் கால நீட்டிப்பு, தள்ளி வைப்பு, வட்டிக் குறைப்பு ஆகியவை பற்றி ஒரு சொல் கூட இல்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறைகூறியுள்ளார்.
प्रधानमंत्री, वित्तमंत्री की 3 दिन की ‘जुमला पैकेज घोषणाओ’ से साफ है - मोदी सरकार ‘हैडलाईन मैनेजमेंट’ से ‘हैल्पलाईन मैनेजमेंट’ तक का सफर तय करने में फेल साबित हुई
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 15, 2020
20 लाख Cr का पैकेज देशवासियो के लिए ‘राहत का पैकेज’ कम बल्कि Voodoo Economics Package अधिक साबित हुआ है
हमारा बयान: pic.twitter.com/iZALqMA0gt
Comments