கோலியை போன்ற தோற்றம் கொண்ட துருக்கி தொலைக்காட்சி தொடர் நடிகர்

0 4072
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை போல அச்சு அசலாக காணப்படும் துருக்கி தொலைக்காட்சித் தொடர் நடிகரின் புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வேகபந்துவீச்சாளர் முகம்மது அமீர் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை போல அச்சு அசலாக காணப்படும் துருக்கி தொலைக்காட்சித் தொடர் நடிகரின் புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வேகபந்துவீச்சாளர் முகம்மது அமீர் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் முகம்மது அமீர், துருக்கி தொலைக்காட்சியில் திரில்லிஸ் எர்துக்ருல் காஜ் எனும் தொடரில் (Dirilis Ertugrul Ghaz) நடித்துள்ள கேவிட் கெடின் கன்னர் (Cavit Çetin Güner) என்பவரின் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் இருக்கும் நடிகர் அச்சு அசலாக விராட் கோலி போலவே இருப்பதாக கருத்து பதிவிட்டு, சகோதரரே இது நீங்களா என கோலிக்கு முகம்மது அமீர் கேள்வியும் எழுப்பியுள்ளார். அந்த படத்தில் தொப்பியுடன் காணப்படும் துருக்கி நடிகர், விராட் கோலியை போலவே இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments