ஹர்பஜன்சிங்குடன் சண்டையிட அவரது அறைக்கு சென்றேன்: சோயிப் அக்தர்
2010ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின்போது ஹர்பஜன் சிங்குடன் சண்டையிட அவரது அறைக்கு சென்றதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதின. இதில் அக்தர் 47ஆவது ஓவரை வீசியபோது ஹர்பஜன்சிங் சிக்சர் விளாசினார். இதனால் 49ஆவது ஓவரை அக்தர் வீசியபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நடுவர் தலையிட்டதால் தகராறு முற்றவில்லை. இருப்பினும் முகமது அமீரின் கடைசி ஓவரில் 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில் சிக்சர் அடித்து ஹர்பஜன் வெற்றி தேடி தந்தார்.
அப்போது தம்மை நோக்கி பலமாக ஹர்பஜன் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்து அவர் தங்கிய ஹோட்டல் அறைக்கு சண்டையிட சென்றதாகவும், தாம் வருவதை அறிந்து அவர் அங்கில்லை எனவும், அடுத்தநாள் அவர் மன்னிப்பு கேட்டதாகவும் அக்தர் தற்போது தெரிவித்துள்ளார்.
Comments