தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் தலைதூக்கும் விலங்குகள் வியாபாரம்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் பல்வேறு உயிரினங்கள் அடங்கிய சந்தைகள் செயல்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்து வரும் நிலையில் கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் மீண்டும் விலங்குகள் சந்தை செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்தச் சந்தைகளில் வழக்கம்போல வவ்வால்கள், பூனைகள், தவளைகள் உள்ளிட்டவை இறைச்சிக்காக விற்கப்படுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கொரோனா பரவியுள்ள நிலையில் தற்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ, வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Comments