ஹோம் டெலிவரி முறையை அறிமுகப்படுத்தியது ஹார்லி டேவிட்சன்

0 2284
ஊரடங்கால் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பலரின் அபிமானத்தை பெற்ற சர்வதேச பைக் தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன், இந்தியாவில் ஹோம் டெலிவரி முறையை கொண்டு வந்துள்ளது.

ஊரடங்கால் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பலரின் அபிமானத்தை பெற்ற சர்வதேச பைக் தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன், இந்தியாவில் ஹோம் டெலிவரி முறையை கொண்டு வந்துள்ளது.

இணையத்தில் எச்.டி. படக்காட்சிகளாக ஹார்லி டேவிட்சன் பைக் மாடல்களை பார்த்த பின், விருப்பப்படும் மாடலை அருகில் உள்ள டீலரிடம் பதிவு செய்து பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால்,  வீட்டு வாசலுக்கே பைக் டெலிவரி செய்யப்படும்.

40 கிலோ மீட்டர் தூரம் வரை இலவச டெலிவரியும், அதற்கு மேல் கிலோ மீட்டருக்கு குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படும். அதே போன்று ஊரடங்கு காலகட்டத்தில் காலாவதியாகும்  ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான காப்பீட்டுத் திட்டங்களுக்கு மேலும் ஒரு மாத கால நீட்டிப்பும் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளருடனான தொடர்பை தக்கவைப்பது மிகவும் முக்கியம் என்பதால் ஹோம் டெலிவரியை கொண்டுவந்துள்ளதாக  ஹார்லி டேவிட்சன் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments