உச்சம் எட்டும் கொரோனா நாள்தோறும் உயரும் பாதிப்புகள்
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், சீனாவை இந்தியா நெருங்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாநிலங் களின் எண் ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, நாள்தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கும் மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. புனேவில், கடந்த 24 மணி
நேரத்தில் 194 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.
மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில், தமிழகம் 2 - வது இடம் வகிக்கிறது. வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நோக்கி உயர்ந்து வருகிறது.
3- வது இடம் வகிக்கும் குஜராத்தில், கொரோனா பாதிப்பு, 9 ஆயிரத்து 592 ஆக இருக்க, அங்கு, இதுவரை 586 பேர் பலி ஆகி இருக்கிறார்கள்.
டெல்லியை பொறுத்தவரை, 9 ஆயிரத்தை நெருங்க, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்காளம் , ஆந்திரா , பஞ்சாப் மற்றும் தெலங்கானாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் பீஹார் மாநிலங்களில், கொரோனா பாதிப்பு, ஆயிரத்தை நோக்கி முன்னேறி வருகிறது.
ஹரியானா , ஒடிசா மற்றும் கேரளாவிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை இப்போது 12 ஆக உயர்ந்துள்ளது.
ஆக மொத்தம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 858 ஆக உயர்ந்தது, அதேபோல கொரோனா காவு வாங்கியோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 658 ஆக அதிகரித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட, 27 ஆயிரத்து 920 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 51 ஆயிரத்து 401 பேர், நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Comments