ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க அசாம் முதலமைச்சர் கோரிக்கை

0 1540
ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க அசாம் முதலமைச்சர் கோரிக்கை

அசாமில் 87 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கக் கோரி மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.

குவகாத்தியில் அசாம் மாநில முதலமைச்சர் சர்வானந்த சோனோவால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாநிலத்தில் கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கக் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் மத்திய அரசுக்கு இது குறித்த ஒரு பார்வை இருக்கும் என்றும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அசாமில் 87 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 39 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments