ஸ்லோவேனியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் எல்லைகளை திறக்க திட்டம்

0 1105

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியாவில் கொரோனா பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளுடன் அந்நாட்டு எல்லைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்நாட்டில் நோய் தொற்றால் ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களால் நாள் தோறும் 7 பேருக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே புதிததாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதால், வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஜானெஸ் ஜான்சா அறிவித்துள்ளார்.

இதனால் ஐரோப்பாவின் மற்ற நாடுகளில் இருந்து வரும் மக்கள் குறைந்தது 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments