பசி, தாகத்தால் தவிப்பதாக கூறி புலம் பெயர் தொழிலாளர்கள் போராட்டம்
மத்திய பிரதேச- மகாராஷ்டிர மாநில எல்லையில் பசி மற்றும் தாகத்தில் இருப்பதாக கூறி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநில எல்லையிலுள்ள செந்த்வா (Sendhwa) எனுமிடத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரகணக்கானோர், தங்களுக்கு உணவு வழங்கக்கோரி போராட்டம் நடத்தினர்.
அந்த நெடுஞ்சாலையானது, உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு செல்ல பயன்படுத்தப்படும் பகுதி என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறியதால் கும்பல் ஒன்று வன்முறையில் குதித்தது.
போலீசார் மீதும் அங்கிருந்த போலீஸ் நிலையம் மீதும் அக்கும்பல் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது. இதனால் அப்பகுதியே போர்களம் போல காட்சியளித்தது.
Comments