பத்ரிநாத் விஷ்ணு கோயில் நடை மீண்டும் திறப்பு
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற விஷ்ணு கோயிலான பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை திறக்கபட்ட போதும், கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கேதர்நாத் கோயில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதியன்று 6 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது அக்கோயிலுக்குள்ளும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பத்ரிநாத் விஷ்ணு கோயில் இன்று காலை 4.30 மணிக்கு திறக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்திருந்தது. அதன்படி கோயில் நடை இன்று காலை 4.30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட 28 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
Comments