தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் - சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நாளை புயல் சின்னமாக மாறும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
காணொலி மூலம் பேசிய வானிலை மைய இயக்குனர் புவியரசன், தமிழ்நாட்டில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோடை மழை பெய்து வருகிறது என்றார். அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரையில் மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.
Comments