மே 18ம் தேதிக்குப் பின் அனைத்துக் கடைகளையும் திறக்க மத்திய அரசுக்கு டெல்லி அரசு கோரிக்கை
மே 17ம் தேதிக்குப் பிறகு மால்களில் உள்ள கடைகள் உட்பட அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதியளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அனுப்பியுள்ள அறிக்கையில் ஊரடங்கு தளர்வைக் கோரியுள்ளது. பேருந்துகள், டாக்சிகள், மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கலாம் என்றும் கடைகள், வணிகவளாகங்கள், சந்தைகளை சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதிக்கலாம் என்றும் டெல்லி அரசு கோரியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வரும் 18ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டலின்படி தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆயினும் பள்ளிகள், திரையரங்குகள் உணவகங்கள் ,மத வழிபாடுகள் போன்றவை மீதான தடை நீடிக்கும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Comments