சென்னையில் மேலும் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2236
சென்னையில் மேலும் 363 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 363 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 363 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரத்து 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 9 பேரும் திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் மேலும் தலா 8 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரியில் ஒரே நாளில் 5 பேர், பெரம்பலூரில் 4 பேர், திருநெல்வேலியில் 3 பேர், மதுரையில் 2 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

தூத்துக்குடி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மேலும் தலா ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர, மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் கத்தார் நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வந்த 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களுக்கு மேல் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று இல்லாமல் இருந்த நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து வந்த கொரோனா நோயாளி ஒருவர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் மட்டும் கொரோனா நோயாளிகள் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments