மாநிலங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசிடம் எதிர்நோக்கியுள்ளதாக துணை முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம்
உடனடி நிதி ஆதரவு தேவைப்படும் மாநில அரசுகளுக்கு நிவாரணம் அளிக்கும் அறிவிப்புகளை மத்திய அரசிடம் எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், சுயசார்பு இந்தியா இயக்கத்துடன் சேர்த்து, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பொருளாதார மற்றும் நிவாரண அறிவிப்பை மோடி வெளியிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோல் சிறுகுறு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு உதவும் வகையில் 15 முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளாலும், இனிமேல் எடுக்க இருக்கும் நடவடிக்கைகளாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதிகபட்ச வளர்ச்சி பாதைக்கு மத்திய அரசு மீண்டும் கொண்டு செல்லும் என நம்புவதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
Comments