100 நாள் வேலை: சுமார் 2 லட்சம் கிராமங்களில், 2.5 கோடி பேருக்கு வேலை - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 2505
தேசிய அளவில் ஒரே மாதிரியான ஊதியத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் சராசரி ஊதியம் 182 ரூபாயில் இருந்து இந்த ஆண்டு 202 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் பெறுவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப் பட்டு உள்ளதாக கூறினார்.

குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனத்திலும் இஎஸ்ஐசி திட்டம் நீட்டிக் கப்பட்டு உள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்குப் பதில், ஓராண்டு பணியாற்றி னாலும் தொழிலாளர்களுக்கு கிராஜிவிட்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் தற்போதைய செலவு மட்டும் 10ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறிய அவர், மே 13ந் தேதி வரை 14.62 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 

ஒரே நாளில் மட்டும் 1.87 லட்சம் கிராமங்களில் 2.33 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments