ரயில் பயணச்சீட்டு ரத்து, கட்டணம் திரும்பப் பெற விதிமுறைகள் மாற்றம்
ரயில் பயணச்சீட்டுகளைப் பயணத் தேதியில் இருந்து ஆறு மாதம் வரை கவுன்டரில் கொடுத்து முழுத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கொரோனா சூழல் காரணமாக பயணச்சீட்டு ரத்து செய்தல், கட்டணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டல்களை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி மார்ச் 21 முதல் பயணம் செய்ய கவுன்டரில் முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டுக்களைப் பயணத்தேதியில் இருந்து ஆறு மாதம் வரை கவுன்டரில் கொடுத்து முழுத் தொகையைத் திரும்பப் பெறலாம்.
இணையத்தளத்தில் முன்பதிவு செய்தோருக்கு முழுத்தொகையும் அவர்களின் கணக்கில் தானாகவே செலுத்தப்படும். ரயில்கள் ரத்து செய்யப்படாமல், பயணிகள் பயணிக்காமல் இருந்தாலும் சிறப்பு நேர்வாகக் கருதி முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
Comments