ஒரே தேசம் ஒரே ரேஷன் திட்டம் 2021 மார்ச் மாதத்திற்குள் அமல்

0 4019
புதுடெல்லியில் 2 வது நாளாக மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், 23 மாநிலங்களின் 67 கோடி குடும்பங்கள் ஒரே தேசம் ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

புதுடெல்லியில் 2 - வது நாளாக மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், 23 மாநிலங்களின் 67 கோடி குடும்பங்கள் ஒரே தேசம் ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் 2 மாதம் இலவச உணவு தானியம் வழங் கப்படும் என்றார்.

வெளி மாநில தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்த 2 மாதம் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என கூறிய நிர்மலா சீதாராமன், வெளி மாநில தொழிலாளர்கள் குடும்பம், ஒவ்வொன்றுக்கும் அடுத்த 2 மாதங்களுக்கு தலா 1 கிலோ சென்னாவும் வழங்கப்படும் என்றார். இலவச உணவு தானிய திட்டத்தின் கீழ் 8 கோடி வெளிமாநில தொழிலாளர்கள் பலன் அடைவர் என்றும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு 2 மாதம் இலவச உணவு தானியம் வழங்க 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிட முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களுக்கு உள்ளூரில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி கொடுக்கும் செயல்முறை துவங்கியுள்ளதாக கூறிய அவர், வெளிமாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

வெளிமாநில தொழிலாளர்களுக்கான இலவச உணவு தானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments