இந்தியாவில் தயாராகும் அனைத்தும் லோக்கல் பொருட்களே-பாஜக

0 3173

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரித்து விற்கும் அனைத்து பொருள்களும் உள்ளூர் தயாரிப்புகள் என்பதால் அவற்றை வாங்கலாம் என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பொருளாதார நிதித் திட்டத்தை அறிவித்த மோடி இந்தியா தற்சார்பை எட்டும் வகையில் சுதேச பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இது பற்றி விளக்கம அளித்துள்ள பாஜக தேசிய செயலர் நரசிம்ம ராவ், உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமின்றி சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கும் பொருள்களும் லோக்கல் தான் என்று கூறியுள்ளார்.

இதைத்தான் வாங்க வேண்டும் எதை வாங்கக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை என்ற அவர், கொரோனா நெருக்கடியில், பல நாடுகள் பிற நாடுகளை நம்பி உள்ள நிலையில், இந்தியா சுயசார்புள்ள நாடாக திகழ்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments