கொரோனாவால் உலகப் பொருளாதாரம் 3.2 சதவிகிதம் வீழ்ச்சி அடையும்- ஐ.நா கணிப்பு
கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.2 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என ஐ.நா.சபை கணித்துள்ளது.
1930 ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு, நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியாக இது இருக்கும் என்பதுடன் சுமார் மூன்றரை கோடி பேர் கொடிய வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும் அது தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரம் 8.5 லட்சம் கோடி டாலர் என்ற அளவுக்கு இழப்பை சந்திக்கும் என்றும் இது கடந்த 4 ஆண்டுகளில் பெற்ற அனைத்து வளர்ச்சிக்கும் ஈடானது என்றும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
Comments