கொரோனாவுக்கு எதிராக 4 ஆயுர்வேத மருந்துகள் பரிசோதனை : ஸ்ரீபாத் நாயக்
கொரோனாவுக்கு எதிராக இன்னும் ஒரு வாரத்துக்குள் 4 ஆயுர்வேத மருந்துகளை இந்தியா பரிசோதிக்க இருப்பதாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் ஒய் நாயக் ((Shripad Y Naik)) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் (remdesivir) என்ற மருந்து தற்காலிக சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் நிரந்தர மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீபத் நாயக் வெளியிட்டுள்ள பதிவுகளில், கோவிட் 19 தொற்றுக்கு எதிராக 4 ஆயுர்வேத மருந்து வகைகளை ஆயுஷ் அமைச்சகமும், இந்திய அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (Council of Scientific & Industrial Research ) கூட்டாக உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
அந்த 4 மருந்துகளையும் கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு வாரத்துக்குள் பரிசோதிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments