நடைபயணமாக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பேருந்து மோதியதில் 6 பேர் பலி

0 1277

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே நடைபயணமாக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது, அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஊரடங்கு காரணமாக, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தொழிலளர்கள் சிலர் தங்களது சொந்த ஊரான பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், முசாபர்நகர்-சஹ்ரன்பூர் மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments