சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 890ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா மையமாக திகழும் ராயபுரம் மண்டலத்தில் நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 890ஆக அதிகரித்துள்ளது.
15 மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 262ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்துக்கு அடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
. இதற்கடுத்து திரு.வி.க.நகர் மண்டலத்தில் 662 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 564 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களிலும் இதுவரை 999 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்தம் 41 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், 4 ஆயிரத்து 202 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். நோய் பாதித்தோரில் 61 புள்ளி 45 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர். 38 புள்ளி 52 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
Comments