இ-ஆபீஸ் தளத்தில் ரகசிய கோப்புகளை கையாளக் கூடாது -மத்திய அரசு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

0 1196

வீட்டிலிருந்து பணியாற்றும் காலத்தில் முக்கியவத்துவம் வாய்ந்த ரகசிய கோப்புகளை (classified files)  இ-ஆபீஸ் (E office) தளத்தில் கையாளக்கூடாதென மத்திய அரசு அதிகாரிகளை உள்துறை அமைச்சகம்  அறிவுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  ரகசிய கோப்புகளை கையாள்வதற்காக ஏற்கெனவே கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை மத்திய உள்துறையும், தேசிய தகவல் பராமரிப்பு மையமும் ((National Informatics Centre)) மதிப்பீடு செய்து வருவதாகவும், அக்கோப்புகளை கையாள்வது குறித்த வழிகாட்டுதல்கள், உரிய நடைமுறை விதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ள லேப் டாப்புகளில் மட்டுமே அரசு பணிகள் மேற்கொள்வதை உறுதிபடுத்த வேண்டும்,  ஊடுருவல் தளங்கள், மால்வேர்களின் தாக்குதலுக்கு ஆளாகாமல் அந்த லேப்டாப்புகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்  எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments