மூங்கில் பற்றாக்குறை காரணமாக சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் பாண்டா கரடிகள்
மூங்கில் பற்றாக்குறை காரணமாக கனடா மிருக காட்சி சாலையில் இருக்கும் 2 பாண்டா கரடிகள் சீனாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றன.
கனடா மற்றும் சீனா இடையே 2 மாதங்களாக விமான போக்குவரத்து குறைந்துள்ள காரணத்தால் மூங்கில் கிடைப்பதில்லை. இதனால் பாண்டா கரடிகள் விரும்பி சாப்பிடும் மூங்கில்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஒவ்வொரு பாண்டாவும் நாள் ஒன்றுக்கு 40கிலோ மூங்கில்களை உணவாக அருந்துகின்றன என்று மிருககாட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனடா-சீனா இடையே 10ஆண்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கனடாவிற்கு 2 பாண்டா கரடிகள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
எர் ஷைன் மற்றும் டா மாவோ என்று பெயரிடப்பட்ட இந்த 2 பாண்டா கரடிகளும் தங்களின் முதல் 5ஆண்டுகளை கனடாவின் டொரோண்டோ மிருககாட்சி சாலையில் கழித்தன. தொடர்ந்து அவைகள் தங்கள் குட்டிகளுடன் கடந்த 2018ஆம் ஆண்டு கல்கரி மிருக காட்சி சாலைக்கு மாற்றப்பட்டன.
Comments