சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் மக்களுக்கு முகக்கவசம்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் மக்களுக்கு இன்று முதல் 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
அப்போது சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரமாக கேட்டறிந்த அமைச்சர், துணியினாலான மறு உபயோகத்திற்கு உகந்த 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு நாளை முதல் இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும்.
— SP Velumani (@SPVelumanicbe) May 14, 2020
ஒருவருக்கு 2 முகக்கவசம் வீதம் மொத்தம் 52 லட்சம் முகக்கவசங்கள் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#COVID19 #WearAMask #ChennaiCorporation
Comments