கொரோனா பரவலுக்கு காரணம் என கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும்-மு.க.ஸ்டாலின்
கொரோனா பரவலுக்கு காரணம் என கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவசரகதியிலான முழு ஊரடங்கு அறிவிப்பால் போதிய அவகாசம் இல்லாததும், கோயம்பேடு சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளத் தவறியதுமே நோய்த்தொற்று பரவலுக்கு காரணம் என கூறியுள்ளார்.
எனவே வணிகர்கள், மக்கள் மீது பழிபோடுவதை விடுத்து, 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கால் உழன்று கொண்டிருக்கும் மக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதோடு, அவர்தம் வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும் உற்ற வழி காண வேண்டும் எனவும், குடும்பத்திற்கு தலா ஐயாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட முன்வர வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.
அவசரகதியில் முழு ஊரடங்கு, காய்கறிச் சந்தையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது என திறனற்ற அரசுதான் கோயம்பேட்டில் நோய்ப் பரவலுக்கு காரணம்.
— M.K.Stalin (@mkstalin) May 14, 2020
தம் இயலாமையை மறைக்க குறிப்பிட்ட பகுதி, மக்கள் மீது பழி போடுவதை @CMOTamilNadu நிறுத்தி, இனியேனும் ரூ.5000 நிவாரணம் வழங்கிட வேண்டும். pic.twitter.com/KwqhrnsYMv
Comments