ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு இன்று ஆலோசனை...
தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுத்து புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்டக்குழுவை கடந்த வாரம் தமிழக அரசு அமைத்தது.
இக்குழுவில் பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெஃப் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் உள்ளனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.இக்குழு பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை மூன்று மாத காலத்திற்குள் தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
Comments