ஊரடங்கிற்கு பிறகு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி தொடங்கும் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

0 1018

ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிகள் தொடங்கும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்களையும் ஒவ்வொரு பகுதியாக மீண்டும் தொடங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் அவசரப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். ஏனெனில் தற்போது சுகாதாரமும் பாதுகாப்பும் மட்டுமே தற்போதைய முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments