கொரோனாவை மீறிய திருவிழா கொண்டாட்டம்...! சமூக விலகலா அப்படீன்னா?

0 7584
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஊரடங்கை மீறி, கிராம மக்கள் ஒன்று கூடி கொரோனா அச்சமின்றி கங்கையம்மன் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஊரடங்கை மீறி, கிராம மக்கள் ஒன்று கூடி கொரோனா அச்சமின்றி கங்கையம்மன் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு இன்றி நடத்தப்பட்ட திருவிழா குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..கொரோனாவா.. எங்கே இருக்குது ? சமூக விலகலா அப்படீன்னா ? என்ற ரீதியில் ஊரடங்கை மீறி தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த பைவலசா கிராமத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது கங்கையம்மன் திருவிழா..!கிராமத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பெண்கள் தலையில் கும்பல் சுமந்துவர தமிழகத்தில் 144 தடை உத்தரவு என்ற ஒன்று அமலில் இருப்பதை மதிக்காமல் திருவிழா கொண்டாடக் குவிந்தனர் மக்கள்..!

சாமி கும்பிட மட்டும் அல்ல பிரசாதம் வாங்க கைக்குழந்தையுடன் சிலர் கூட்டத்தில் முண்டியடித்தனர்.இப்படி ஒரு திருவிழா யாருக்கும் தெரியாமல் அவசரம் அவசரமாக வெல்லாம் நடந்து முடிந்துவிடவில்லை, பகலில் கும்பம் எடுத்து கும்பலாக கொரோனாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய கிராமத்து மக்கள் இரவு திருவிழாவில் கும்பலாக கூடி விளக்கேற்றி வழிபட்டனர்.

பகலிலும் சரி இரவிலும் சரி அங்கு பெயருக்கு கூட ஒரு காவலர்கூட வரவில்லை என்று கூறப்படுகிறது. கிராமத்தை நிர்வாக அலுவலரும் ஆர்.கே. பேட்டை தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்காததால் திட்டமிட்டபடி ஊர் மக்கள் ஒன்று கூடி திருவிழா கொண்டாட்டத்தை செய்து முடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்தம் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் எத்தனை பேர் சென்னை உள்ளிட்ட வேறு இடங்களுக்கு சென்று வந்தார்கள்? அவர்களில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தாலும் நிலைமை விபரீதமாகி விடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எனவே கொரோனா வந்த பின் நொந்து கொள்வதை விட, விழித்திரு, தனித்திரு, வீட்டிலேயே இரு என்ற அரசின் முழக்கத்தை பின்பற்றுவதன் மூலமே தற்போதைய நிலையில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க முடியும்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments