பிஎஸ்எப், சிஆர்பிஎப் பாதுகாப்புப் படைகளை சேர்ந்த வீரர்கள் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 964
பிஎஸ்எப், சிஆர்பிஎப் ஆகிய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த வீரர்கள் மேலும் 16 பேருக்கு கொரோனா நோய் உறுதியாகியிருப்பது பாதுகாப்பு படை வட்டாரத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிஎஸ்எப், சிஆர்பிஎப் ஆகிய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த வீரர்கள் மேலும் 16 பேருக்கு கொரோனா நோய் உறுதியாகியிருப்பது பாதுகாப்பு படை வட்டாரத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

டெல்லியில் மேலும் 11 பிஎஸ்எப் படை வீரர்களுக்கும், கொல்கத்தா, திரிபுராவில் தலா ஒரு பிஎஸ்எப் வீரருக்கும் கொரோனா நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து, சிஆர்பிஎப் படைப்பிரிவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.

இதில் 242 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 4 பேர் குணமடைந்துவிட்டனர். ஒரு சிஆர்பிஎப் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments