வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் 4 மாதம் அவகாசம்
2019 - 2020 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லியில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூலை 31 ம் தேதி வரை, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழலில், நவம்பர் 30 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டிடிஎஸ் வரி பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் வரை 25% குறைக்கப்படும் என்று கூறிய அவர், இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பலன்கிடைக்கும் என்றார்.
இதுதவிர, வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு சேர வேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாய் தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அரசு செலுத் தும் என கூறிய அவர், இதன் மூலம் 72 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்றும், இதற்காக, மத்திய அரசு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Comments