கொரோனா நோயாளிகள் அருகில் உள்ளார்களா என அறிய உதவும் ஆரோக்கிய சேது செயலி பயனாளர்கள் 10 கோடியாக அதிகரிப்பு

0 2553
கொரோனா பாதித்தோர் அருகில் உள்ளார்களா என்பதை அறிவதற்கு பயன்படும் ஆரோக்கிய சேது செயலியை நாட்டில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்தோர்  அருகில் உள்ளார்களா என்பதை அறிவதற்கு பயன்படும் ஆரோக்கிய சேது செயலியை நாட்டில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் அருகில் உள்ளார்களா என மக்கள் அறிந்து கொள்வதற்கு ஆரோக்கிய சேது செயலி மத்திய அரசால் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அது கட்டாயமாக்கப்பட்டது.

இதையடுத்து அறிமுகமான 13 நாள்களில் அதை செயலியை பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை 5 கோடியைத் தொட்டது.

இந்நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 10 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம்  அறிமுகமான குறுகிய காலத்தில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று என்ற பெருமையை ஆரோக்கிய சேது பெற்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments