வந்தே பாரதம் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தில் 30,000 இந்தியர்களை மீட்டு கொண்டுவர திட்டம்

0 3606

இந்தியர்களை மீட்கும் வந்தே பாரதம் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தில் 30,000 பேர் அழைத்து வரப்படுவார்கள் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதற்காக வரும் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 149 விமானங்கள் இயக்கப்படும் என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  ஆர்மேனியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட சுமார் 20 நாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி துவங்கி வரும் 14 ஆம் தேதி வரை நடக்கும் முதற்கட்ட கட்ட மீட்பில் ,12 நாடுகளில் இருந்து 14800 பேரை 64 விமானங்கள் வாயிலாக மீட்கும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments