துபாயில், பூங்காக்கள், கடற்கரைகளை திறக்க அனுமதி
ஊரடங்கை படிப்படியாக விலக்கி வரும் துபாய் அரசு பொது பூங்காக்களை திறக்கவும், தனியார் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் தனியார் கடற்கரைகளில் கூடவும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
துபாய் கடந்த 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை 8 மணி நேர இரவு நேர ஊரடங்காக மாற்றி அறிவித்தது.
குறைந்த எண்ணிக்கையில் உணவு விடுதிகளில் அமர்ந்து உண்ணவும், குறைந்த வாடிக்கையாளர்களுடன் ஷாப்பிங் மால்களைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
பூங்காக்கள், பீச்சுகள் திறக்கப்பட்டாலும் 5 பேருக்கு அதிகமாக ஒன்றாக கூடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளிவாசல்கள், திரையரங்குகள், பொது பீச்சுகள், இரவு விடுதிகள் ஆகியன தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என துபாய் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments