வந்தே பாரத் திட்டம் மூலம் அமெரிக்கா, ஓமன் நாடுகளிலிருந்து 224 பேர் அழைத்து வரப்பட்டனர்

0 2300
வந்தே பாரத் திட்டம் மூலம் அமெரிக்கா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து 224 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

வந்தே பாரத் திட்டம் மூலம் அமெரிக்கா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து 224 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், 3 குழந்தைகள், 54 பெண்கள் உட்பட 183 பயணிகளுடன் நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

அதே போல் அமெரிக்காவின் சிகாகோ மாநிலம் ஓர்லேண்டோவிலிருந்து 62 பெண்கள் உள்ளிட்ட 141 பயணிகளை அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா மீட்பு விமானம் இன்று காலை சென்னை வந்தடைந்தது.

பயணிகள் அனைவருக்கும் உடல்வெப்பம், அறிகுறி உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதே போல் அவர்களது உடமைகள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments