பிரதமர் மோடியின் பிரம்மாண்டமான பொருளாதார நிதி உதவித் திட்டம்-பிரிட்டன் அரசு அறிவித்த திட்டத்தின் மாதிரியில் தயாரானது என தகவல்

0 1686

பிரதமர் அறிவித்துள்ள பிரம்மாண்டமான பொருளாதார நிதி உதவித் திட்டம், 2 மாதங்களுக்கு முன்னர் பிரிட்டன் அரசு அறிவித்த திட்டத்தின் மாதிரியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் முடங்கி உள்ள பொருளாதாரத்தை கைப்பிடித்து உயர்த்தும் நோக்கில் 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை மோடி அறிவித்துள்ளார்.

இது சிறுகுறுநடுத்தர தொழிற்துறை,தொழிலாளர் நலன், வங்கிக்கடன், விவசாயிகள், புலம் பெயர் தொழிலாளர்கள், குடிசைத் தொழில் மற்றும் அனைத்து தொழிற்துறையினருக்கும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனில் முதற்கட்டமாக தொழிற்துறை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு 30 பில்லியன் பவுண்ட் பொருளாதார நிதித் திட்டம் அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் தொழில்களுக்கான வங்கி கடனாக 330 பில்லியன் பவுண்டுகள் அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments